over 10 years ago by Manthri.lk - Research Team under in ஆய்வறிக்கை

 

 பாராளுமன்றத்தில் இருக்கும் அங்கத்தவர்களில் 25% தேசியப் பட்டியல் மூலம் நியமணம் பெறுபவர்களே.
 
 சபையில் உள்ள தேசியப் பட்டியல் அங்கத்தவர்களில், அரசாங்க அங்கத்தவர்களை விட எதிர் கட்சியின் தேசியப் பட்டியல் அங்கத்தவர்கள் இரு மடங்காவர்.
இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225. இதில் 186 பேர் (87%) நாட்டின் 24 மாவட்டங்களில் இருந்து மக்களின் வாக்கு மூலம் தெரிவு செய்யப்பட்டு சபைக்கு வருகின்றனர். மிகுதி 29 பேர் (13%) தேசியப் பட்டியல் ஊடாக நியமணம் பெற்று அங்கு வருகின்றனர்.  
தேசியப் பட்டியல் முறைமையின் குறிக்கோள்:
மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள, தன்னுடைய வாழ்நாட்களை கல்வி ஞானத்தை பெறுவதற்காக செலவு செய்த, ஆனால் அரசியல் பின்னணியோ அனுபவமோ அல்லது தேர்தல் ஒன்றின் போது மக்களின் வாக்குகளை பெறுவதற்கான அடிப்படையோ வலையமைப்போ இல்லாத அறிஞர்களுக்கும் விற்பன்னர்களுக்கும் பாராளுமன்றத்திற்கு வரும் வாய்ப்பை வழங்கி அதன் மூலம் அவர்களுடைய அறிவின் பயனை மக்கள் அடையச் செய்வதே தேசியப் பட்டியல் முறைமையின் குறிக்கோளாகும். 
இம்முறைமை எதிர்பாத்த பயனை தந்துள்ளதா?
இக்கேள்வி மற்றுமொரு முக்கியமான விணாவை எழுப்புகின்றது. அதாவது, தேசியப் பட்டியல் மூலம் நியமணம் பெறும் கல்விமான்கள் அந்த வாய்ப்பை அவர்கள் பெற்றதை நியாயப்படத்தும் விதத்தில் பாராளுமன்றத்திற்கு போதுமான அளவு தமது பங்களிப்பை தருகின்றனரா என்பதே அவ்விணாவாகும். இது வரை இந்த விடயம் தெளிவற்றதாகவே இருந்து வந்துள்ளது. 
தற்போது நாம் அறிமுகம் செய்துள்ள  Manthri.lk எனப்படும் ஒப்பற்ற இணையப்பக்கம் ஒப்பீட்டு மற்றும் அளவு அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பை குறிப்பிடும் அளவு துள்ளியமாக கணிப்பீடு செய்யும்.   
பாராளுமன்றத்தில் இருக்கும் அங்கத்தவர்களில்  25%  தேசியப் பட்டியல் ஊடாக வந்தவர்கள் என்றும், அதே வேளை, சபையில் உள்ள தேசியப் பட்டியல் அங்கத்தவர்கள் அரசாங்க அங்கத்தவர்களை விட எதிர் கட்சியின் தேசியப் பட்டியல் அங்கத்தவர்கள் இரு மடங்காவர் என்பதையும் நாம் மேலே குறிப்பிட்டோம். மேலும், மாவட்ட பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அரச தரப்பால் நியமிக்கப்படும் தேசியப் பட்டியல் அங்கத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சத வீதத்தால் குறைவானதாகும்.   
தேசியப் பட்டியல் முறைமையின் குறிக்கோளை எதிர் கட்சியால் நியமிக்கப்படும் தேசியப் பட்டியல் அங்கத்தவர்கள் ஓரளவு நிறைவேற்றி வந்தாலும் அரச தரப்பு தேசியப் பட்டியல் அங்கத்தவர்களின் இது தொடர்பான செயற்பாடு திருப்திகரமாக இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. 
செயற்பாடு கணிப்பீடு:
2012 மே முதல் 2013 ஆகஸ்டு இடைப்பட்ட காலக்கெடுவின் பாராளுமன்ற அங்கத்தவர்களின் செயற்பாடுகள் கணிப்பீடு செய்யப்பட்டது. அதன் போது, மாவட்டங்களில் இருந்து பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட அங்கத்தவர்களை விட தேசியப் பட்டியல் அங்கத்தவர்கள் அவர்களுடைய பாராளுமன்ற நேரத்தை  25% அதிக செயற்றிறனுடன் வழங்கியுள்ளமை புலனாகியது.   
 
 
இருந்த போதிலும், அவர்களுடைய  செயற்பாடும்  மெச்சத்தகும்  விதத்தில் இருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சபையில் அதி கூடிய செயற்றிறனை காட்டிய  22 (10%) அங்கதத்வர்களுள்  தேசியப் பட்டியல்  அங்கத்தவர்கள் 4  பேர்  உட்படுபவர். அவர்கள் தர வரிசைப்படுத்தல் அடிப்படையில் அனுர குமார  திசாநாயக (மவிமு), ஏ. எச். எம். அஸ்வர் (சுதந்திர ஐக்கிய முன்னணி),  ஹர்~ டி சில்வா (ஐதேக)  மற்றும் எரான் விக்ரமரத்ன (ஐதேக) ஆவர். அதே போன்று, மிக மோசமான செயற்பாட்டிட்காக பதிவாகியுள்ள  10%  இலும் தேசியப் பட்டியல் அங்கத்தவர்கள் நால்வர் உள்ளமை குறிப்படத்தக்கது.  
எதிர் கட்சியில் 12 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் உள்ளதுடன் அரச கூட்டணியில் 17 பேர் உள்ளனர். கணிப்பீட்டின் போது, அரச தரப்பு தேசிய பட்டியல் உறுப்பினர்களிள் பங்களிப்பை விட எதிர் கட்சியின் உறுப்பினர்களின் பங்களிப்பு இரு மடங்கு இருந்தமையும் தெரிய வந்தது.   
தேசியப் பட்டியல் முறைமை செயற்படும் விதம்:
தேசியப் பட்டியலிற்காக தமது வேட்பாளர்களை முன்மொழியும் சந்தர்ப்பமானது, அரசியல் கட்சிகள் மாவட்டங்களில் பெறும் வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படுவது கிடையாது. மாறாக இது, தேசிய அடிப்படையில் ஒரு கட்சி அல்லது கூட்டணி பெறும் வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகின்றது. இம்முறைமைக்கு ‘தேசியப் பட்டியல்’ என்ற பெயர் இதன் காரணமாகவே தரப்பட்டது. மேலும், இந்த பட்டியலுக்கான  தமது  உறுப்பினர்களை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அரசியல் கட்சிகள் பிரகடணப்படுத்த வேண்டும் என்பதும் ஒரு நியதியாகும். அவர்களில் இருந்தே தேசியப் பட்டியலுக்கான அங்கத்தவர்களை தேர்தலின்  பிறகு  அக்கட்சி  தெரிவு  செய்ய வேண்டும். 
 
   
 
 
 
 
 
தமக்கு விருப்பமான மூவருக்கு விருப்பு வாக்குகளை அளிக்கும் மாவட்ட தேர்தல் முறைமையில் செய்வது போல தேசியப் பட்டியல் முறைமையில் விருப்பு வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பமும் கிடையாது. குறிப்பிட்ட ஒரு கட்சி நாடளாவிய விதத்தில் பெறும் ஒட்டு மொத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமக்கான தேசியப் பட்டியல் அங்கத்தவர்கள் ‘நேரடியல்லாத’ விதத்தில் தெரிவு செய்யும்.