over 9 years ago by manthri.lk - research team under in ஆய்வறிக்கை

 பாராளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 21 ன்றில் 11 ஐ ‘சிறுபான்மைக் கட்சிகள்’ என வகைப்படுத்தலாம். அதாவது பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளில் பாதிக் கட்சிகள் குறிப்பிட்ட சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஆனால் இக்கட்சிகள் எந்தளவு தமக்கிடையே உரையாடிக் கொள்கின்றன மற்றும் இனங்களுக்கிடையோன புரிந்துணர்வை மேம்படுத்திக் கொள்கின்றன? 


Manthri.lk எனப்படுவது பாராளுமன்றத்தில் உள்ளவர்களின் செயற்பாடுகளை அவதானித்து அவற்றை தரப்படுத்தும் ‘ஒன்லைன் போர்டல்’ ஒன்றாகும். சிறுபான்மைக் கட்சிகள் தமக்கிடையே மேற்கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்களையும் இது கண்காணித்து வருவதோடு அது தொடர்பான கேள்விகளுக்கும் பதில் தருகின்றது. 

சிறுபான்மைக் கட்சிகளின் அளவு சிறியதாகும்: சிறுபான்மைக் கட்சிகளின் அங்கத்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35 ஆகும். இதனடிப்படையில் ஒரு கட்சியின் சராசரி அங்கத்தவர் எண்ணிக்கை 3 ஆகும். சிறுபான்மைக் கட்சிகளை சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் என வகைப்படுத்தலாம். 

தமிழ் கட்சிகள் மிகப் பெரியதும் அதிக கூச்சல் எழுப்பக் கூடியவையுமாக இருக்கின்றன: மேற்படி குழுக்களில் மிகவும் பெரியது தமிழ்க் கட்சிகளின் குழுக்களாகும். தமிழரசுக் கட்சியின் (ITAK) 12 உறுப்பினர்களும் ஏனைய கட்சிகளான ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி (EPDP), அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF),  ஜனநாயக மக்கள் முன்னணி (DPF) தேசிய தொழிலாளர் சங்கம் (NUW) மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) அங்கத்தவர்களையும் சேர்த்து, பாராளுமன்றத்தில் 7 தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் உள்ளனர். (அட்டவனை 1 பார்க்கவும்). மேற்குறிப்பிட்ட 3 சிறுபான்மைக் கட்சிகளில் ஒரு உறுப்பினர் வழங்கும் அதிகபட்ச சராசரி பங்களிப்பை வழங்கும் உறுப்பினர்கள் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களே. 

முஸ்லிம் கட்சிகள், மிகவும் குறைவாக கூச்சல் எழுப்புபவர்கள்: அளவு அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் இரண்டாவது ஸ்தானத்தில் இருந்தாலும் மிகவும் அமைதியானவர்கள் இவர்களே. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ACMC) மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) என்ற இரு கட்சிகளை சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் மொத்தம் 10 பேர் பாராளுமன்றத்தில் உள்ளனர். 


சிங்கள சிறுபான்மைக் கட்சிகள் அளவில் சிறிதானாலும் கூச்சல் அதிகம்: இவர்கள் கூச்சலிடுவதில் தமிழ் உறுப்பினர்களையும் மிஞ்சுபவர்கள் ஆவர். ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய விடுதலை முன்னணி என்ற இவ்விரு கட்சிகளைச் செர்ந்தவர்கள் மொத்தம் 5 பேர் பாராளுமன்றத்தில் உள்ளனர். 



                                            



இணக்கப்பாடா முரண்பாடா? 

சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த தலைப்புக்களின் விடயத்தில் அவை இடையே ஏற்பட்ட இணக்கப்பாடு மற்றும் முரண்பாடு ஆகியவற்றை அட்டவணை 2 வெளிப்படுத்துகின்றது. கல்வி, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய தலைப்புக்களில் 3 சிறுபான்மைக் கட்சிகளும் இணக்கப்பாடு காட்டுகின்றன.   

முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகள் இடையே அதிக இணக்கப்பாடு: மோதல் முடிவுற்றதன் பின்பான கால கட்டத்தில் மோசமடைந்துள்ள மீள் குடியேற்றம், பொது நிர்வாகம், மீன்பிடி, மாகாண மற்றும் உள்;ளுராட்சி சபைகள் உட்பட்ட மனித நேய மற்றும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பான விடயங்களிலேயே முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகள் அதிகம் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளன.  

தமிழ் மற்றும் சிங்களக் கட்சிகளின் இணக்கப்பாடு: மீளிணக்கம் மற்றும் தேசிய ஒறுமைப்பாடு ஆகிய விடயங்களில் சிங்கள மற்றும் தமிழ் சிறுபான்மைக் கட்சிகள் இணக்கப்பாடு தெரிவித்துள்ளன. ஆனால் முஸ்லிம் கட்சிகள் சுட்டிக்காட்டும் விடயங்கள் மட்டுமின்றி, தமிழ்க் கட்சிகளினால் மற்றும் சுட்டிக்காட்டப்படும் மனித உரிமைகள் மற்றும் காணி பகிர்ந்தளிப்பு தொடர்பான பிரச்சினைகளில் சிங்களக் கட்சிகள் இணக்கப்பாடு தெரிவிப்பதில்லை. அதே போன்று சிங்களக் கட்சிகள் பேசும் தேசியக் கொள்கை தொடர்பான விடயங்கள் மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் போன்ற விடயங்களில் தமிழ்க் கட்சிகள் இணக்கப்பாடு காட்டுவதில்லை.    



                                                         

இன ரீதியான கட்சிகள் பாராளுமன்றத்தில் இருப்ப நன்றானதா? வினைத்திறன்மிக்க பேச்சுவார்தைகளாக மாற்றியமைப்பதற்கு என்ன செய்யலாம்? உங்களது அபிப்பிராயங்களை 071-4639882 ஊடாக குறும்செய்தியாகவோ அல்லது facebook.com/Manthrilk  மூலமாகவோ அனுப்பிவைக்கலாம்.