over 9 years ago by Manthri.lk - Research Team under in ஆய்வறிக்கை

ஏப்றில் 24ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதிகளில் பாராளுமன்றமானது 2008 ஆம் ஆண்டின் 14 இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மூன்று வர்த்தமானி கட்டளைகளை (இல.1847/35-37) நிறைவேற்றியது. இக்கட்டளைகள் உயர் நிலைக் கடைத்தொகதிகள் உயர்தர வாசஸ்தலங்கள் அலுவலக இட வசதிகள் மற்றம் சேவை இடவசதிகள்  ஆகியவற்றையும் உள்ளடக்கக்கூடிய மூன்று வேறு ஒன்றிணைந்த அதி சொகுசு சுற்றுலா விடுதிகளுக்கான வரி மற்றறும் ஏனைய அத்தகைய சலுகைகளை  அங்கீகரிகரிப்பதற்கானவையாகும். 

இச்சலுகைகள் கசினோ நடவடிக்கைகளையும் உள்ளடக்கி இருந்தமையினாலும், ஏற்கனவே வாபஸ்பெறப்பட்ட ஒன்றை கபடத்தனமாக மீண்டும் உள்ளே கொண்டு வரும் வகையில் இக்கட்டளைகள் அமைந்திருந்தமையாலும் அவை சர்ச்சைக்குரியனவாக இருந்தன. இச்சலுகைகளைப் பெறும் கம்பனிகள் குயின்ஸபெரி லெச பிறைவேட் லிமிட்டெட் (வர்த்தக ஜம்பவான் திரு. தம்மிக்க பெரேராவுடன் தொடர்புடையது) மற்றும் லேக் லெஸ          ஹால்டிங் (க்றோன் றிசோட் லிமிட்டெட் திரு. ருவி விஜயரத்ன உடன் தொடர்புடையது) ஆகியனவாகும். 

பாராளுமன்றத்தினனைத்து நடவடிக்ககைளுயும் அதன் பஙகேற்பாளர்களையும் கண்காணித்து தர வரிசைப்படுத்தும் ஒரு முன்னோடி இணையத்தள மேடையாகிய  Manthri.lk யின் அணியினர் பாராளுமன்ற ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளவாறான வாக்கெடுப்பை பகுப்பாய்வு செய்தனர்.   

இக்கட்டளைகளுக்குச் சார்பாக எந்த ஒரு எதிர் கட்சி உறுப்பனரும் வாக்களிக்கவில்லை.  தற்போதைய பாராளுமன்றத்தில் முதல் தடவையாக ஐமசுமு இவ்வாக்கெடுப்பில் பரந்தளவு எதிர்ப்பை வெளிப்படுத்தியது.  பாராளுமன்றத்தில் அதற்குள்ள 162 வாக்குப் பலத்தில் 104 வாக்குகள் மட்டுமே மூன்று கட்டளைகளுக்கும் சார்பாக அளிக்கப்பட்டன. 


                       


மூன்றுக்கும் எதிராக      மூன்றுக்கும் சார்பாக         வாக்களிப்பில் மாற்றம்          அனைத்திற்கும் சமுகமின்மை   

ஐமசுமு
 யின் வாக்களிப்பு 




             
             



ஐஸ்ரீலசுக வாக்களிப்பு          

    அனைத்திற்கும் சார்பாக  - 87 பா.உ. கள்         

    அனைத்திற்கும் சமுகமின்மை (புறக்கனிப்பு) – 27 பா.உ.கள்   
     
  இரண்டும் கலந்த வாக்களிப்பு – 11 பா.உ.கள் (உரு 1 இல் காட்டப்பட்டவாறு)   


உரு 1- ஸ்ரீலசுக கலந்த வாக்களிப்பு 

Fig. 1 – SLFP Mixed Voting 



ஏனைய ஐமசுமு கூட்டணி பங்காளிகள்:    

அனைத்திற்கும் சார்பாக  - 17 பா..உ. கள்    

அனைத்திற்கும் எதிராக   - 1 பா..உ. (அதுரலியே ரதன தேரோ)   

அனைத்திற்கும் சமுகமின்மை (புறக்கனிப்பு) – 14 பா.உ.கள்    

இரண்டும் கலந்த வாக்களிப்பு – 5 பா.உ.கள் (உரு 2 இல் காட்டப்பட்டவாறு) 

Fig. 2 – கூட்டமைப்பு கலப்பு வாக்களிப்பு 



ஐமசுமு கூட்டணி வாக்குகளை ஆழமாக ஆராய்தல்   

ஸ்ரீலமுகா:  அனைத்து உறுப்பினர்களும் சமுகமளிக்காது  அனைத்து வாக்கெடுப்புகளிலிருந்தும் விலகி நின்றனர்.   

ஜாஎஉ:  வாக்கெடுப்பு முறை பின்வருமாறு மாறுபட்டிருந்தது


எல்லாவல மேதானந்த தேரோ  - மூன்றுக்கும் சமுகமின்மை 
 
அதுலலியே ரதன தேரோ     - மூன்றுக்கும் எதிராக வாக்களித்தார். 
  
சம்பிக்க ரனவக்க   - முதாலாவது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஏனைய  இரண்டிற்கும் எதிராக வாக்களித்தார்


2 ஆம் மற்றம் 3 ஆம் வர்த்தமானி கட்ளைகள்மீதான வாக்ககெடுப்பிற்கு சமுகமளிக்காத உபேக்ஷா சுவர்னமாலி மற்றும் 1 ஆம் கட்டளைக்கு வாக்களிக்க சமுகமளிக்காத மனுஷா நாணயக்காரவையும் தவிர  ஐதேக யிலிருந்து  ஐமசுமு கட்சித் தாவிச் சென்றவர்கள்         (மொத்தம் 7 கா.உ.கள்)  இக்கட்டளைகளுக்குச் சார்பாக வாக்களித்தனர்.   

இந்த வாக்கெடுப்பு முறை குறித்து நீங்கள் ஆச்சரியமடைகிறீர்களா? அரசாங்கத்திற்கு அதன் உறுப்பினர்களால் நியாமற்ற முறையில் கவனிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கருதுகின்றீர்களா? கருத்து முரண்பாடுடைய பா.உ.கள் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்று கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? 

உங்களுடைய கருத்துகளை  குறுஞ்செய்தியாக 071-4639882 என்ற இலக்கத்திற்கு அனுப்புங்கள் அல்லது facebook.com/Manthrilk  இல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.