සිංහල தமிழ் English

பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள்

Person-left

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி
(UNFGG) Click Here

Person-right

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
(UPFA)Click Here

Status-legend.ta

இலங்கையின் 8ஆவது பராளுமன்றத்திட்கான பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கூட்டணிகளான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (UNFGG) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UPFA) என்பன இணைந்து ஒரு கூட்டரசாங்கத்தை தோற்றுவித்தது. பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி UNFGG யில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியாகும். அத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியாகும்.

Manthri.lk இன் ‘Manifesto Tracker’, UNFGG மற்றும் UPFA ஆகிய கூட்டணிகள் தமது தேர்தல் விஞ்சாபனங்களில் வெளியிட்ட செயல்படுத்தக் கூடிய வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கின்றது. அனைத்து வாக்குறுதிகளும் அதன் உள்ளடக்கத்திட்கேட்ப வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் தற்போதைய முன்னேற்றத்தின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

  • மீன்பிடி சட்டங்களில் திருத்தங்களை செய்வதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி தடையை நீக்குவதுடன் GSP+ வரிச்சளுகையினையும் மீளப்பெறுதல்

    ஐரோப்பிய ஒன்றியம் 2015ம் ஆண்டு இலங்கையில் சட்ட விரோத மீன்பிடியை தடை செய்ய தகுந்த சட்டங்கள் அமுலில் இல்லை எனக்கூறி இலங்கையில் இருந்தான ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதியை தடை செய்தது.

    சட்ட விரோத மீன்பிடியை தடை செய்ய சிறந்த ஆளுகைகளை அறிமுகப்படுத்தியதன் விளைவாக ஜூன் 2016 இல் மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடுகளும் சட்டவிரோத மற்றும் பதிவுசெய்யப்படாத மீன்பிடிய கட்டுப்படுத்த தேசிய கொள்கையும் அறிமுகம் செய்யப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகையினை மீள் பெற்றுக்கொள்ள விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமுல்படுத்தியதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் பின் அச்சலுகையும் கிடைக்கப்பெற்றது

    more
    Complete.ta
  • அபிவிருத்தி (விஷேட ஏற்பாடுகள்) சட்டத்தை இயற்றி விஷேட அபிவிருத்தி நிறுவனத்தை

    அபிவிருத்தி (விஷேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தேசிய கொள்கை வகுப்பை எளிதாக்கவும் துரிதப்படுத்தவும் பிறேரிக்கப்பட்டது. ஒரு விஷேட அபிவிருத்தி நிறுவனம் கொள்கை வகுப்பை கண்காணித்து துரிதப்படுத்த மற்றும் முதலீடுகளை ஒன்றிணைத்து மேற்பார்வை செய்ய ஸ்தாபிக்கப்படும்.

    இச்சட்டமூலம் நவம்பர் 2016 இல் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டதனைத் தொடந்து மாகாண சபைகளுக்கு அவற்றின் கருத்துக்களைப் பெற அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின் எவ்வகையான முன்னேற்றமும் பதிவாகவில்லை

    more
    Poor-progress-slow.ta
  • 11 பிரமாண்ட கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயங்களை நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை

    more
    No-action.ta
  • பிரமாண்ட சுற்றுலா அபிவிருத்தி வலயங்களை நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை

    more
    No-action.ta
  • 23 பிரமாண்ட விவசாய அபிவிருத்தி வலயங்களை நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • 10 பிரமாண்ட மீன்பிடி அபிவிருத்தி வலயங்களை நிறுவுதல்

    ஹம்பாந்தோட்டையில் பிரமாண்ட மீன்பிடி அபிவிருத்தி நலையத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றதுடன் மன்னாரில் நிர்மாணிப்பதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

    more
    Poor-progress-slow.ta
  • தேசிய விவசாய சந்தைப்படுத்தல் அதிகார சபையொன்றை நிறுவுதல்

    முன்மொழியப்பட்ட அதிகார சபை விவசாயிகளிடம் இருந்து அவர்களின் அறுவடைகளை கொள்வனவு செய்யும். அத்துடன் விவசாய உற்பத்திப் பொருட்களின் விற்பனையை ஒருங்கிணைப்பு செய்வதுடன் சந்தை, போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தும் வசதிகளையும் வழங்கும்.

    2016 வரவு செலவுத் திட்டம் அறுவடைக்குப் பின்னரான இழப்புக்களை குறைக்கும் முகமாக 3 கலைக்கலஞ்சியசாலைகளை நிர்மாணிக்க ரூபா.1000 மில்லியன் பரிந்துரை செய்ததுடன் 2016 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளிலும் இத்தொகை உள்ளடக்கப்பட்டிருந்தது. 2017 பெப்ரவரியில் பிரதமர் அதிகாரசபையை அமைப்பதற்கான எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    more
    Poor-progress-slow.ta
  • சிறிய தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுக்கான பெறுமதி சேர் தேயிலை ஏற்றுமதி கம்பனி ஒன்றின் நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேயிலை மீள்நடுகைக்கான மானியங்கள அதிகரித்தளுடன் விஸ்தரிப்பு சேவைகளையும் உள்ளடக்குதல்

    நிதி அமைச்சின் ஆண்டறிக்கை - 2016 இன்படி அரசாங்கம் ரூபா 484.03 மில்லியன்களை தேயிலை மீள்நடுகைக்காக மானியங்களாக வழங்கியுள்ளது.

    more
    On-track.ta
  • சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி (SME) விருத்தி சபையொன்றை நிறுவுதல்

    இவ்விஷேட SME விருத்தி சபை சிறிய மற்றும் நடுத்ததர தொழில் முயற்சிகளை பங்குச் சந்தையில் நிரற்படுத்த உதவும்.

    கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தால் இச்சபையை ஆரம்பிப்பதற்கான எண்ணம் பலமுறை வெளியிடப்பட்டது. இருந்தபோதும் 2016 வரவு செலவுத் திட்டத்தில் நிரற்படுத்தப்பட்ட பொது நிறுவங்களின் வருடாந்த பதிவு செய்தல் கட்டணத்தை அதிகரித்ததன் பின்னர் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

    more
    No-action.ta
  • மகரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தினை மாதிரியாகக் கொண்ட இளைஞர் மன்றங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவுதல்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேசிய இளைஞர் படையணியை மீள்செயட்படுத்தல்

    தேசிய இளைஞர் படையணி 18-29 வயதுக்கிடைப்பட்டவர்களிற்கு தொழில் பயிற்ச்சி, ஆளுமை விருத்தி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்கும்.

    நிதியமைச்சின் ஆண்டறிக்கை- 2016 இன்படி தேசிய இளைஞர் படையணியை மீள் செயற்படுத்த ரூபா. 840 மில்லியன் நிரல் அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டது.

    more
    On-track.ta
  • ஆயுத படைகளில் இருந்து விரும்பியவர்கள் தன்னார்வமாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் உடைய சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • அரசாங்க உத்தியோகத்தர்கலுக்கான "அக்ரகாரா" காப்பீட்டுத் திட்டத்தினை ஓய்வூதியம் பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கும் வழங்குதல்

    "அக்ரஹாரா" காப்புறுதி நலனை ஓய்வூதியம் பெற்ற அரச ஊழியர்களிட்கு 70 வயது வரை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு மார்ச் 30, 2016 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதனைத்தொடர்ந்து ஓய்வூதியத் திணைக்களம் இது சம்பந்தமாக அரச நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. 2017 வரவு செலவுத் திட்டத்தில் "அக்ரஹாரா" காப்புறுதி நலனை அரச ஊழியர்களது ஆயுட்காலதிட்கும் வழங்க முன்மொழியப்பட்டது.

    more
    Complete.ta
  • அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் பிறிதோர் தொழில் செய்வதற்கு 5 ஆண்டுகள் ஊதியம் இல்லா விடுப்பு வழங்குதல்

    அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைசிச்னால் வெளியிடப்பட்ட தாபனக் கோவையிற்கு அமைவாக தற்போது அரச ஊழியர் ஒருவரிற்கு வெளிநாட்டில் வேலை நிமித்தம் அல்லது உயர்கல்விக்காக ஆகக்கூடியது 5 வருடம் ஊதியம் இல்லா விடுப்பு வழங்கப்பதுவதுடன் உள்நாட்டில் உயர்கல்விக்காக 3 வருடம் ஊதியம் இல்லா விடுப்பு வழங்கப்படும்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேசிய ஓய்வூதிய அலுவலகம் மற்றும் ஆலோசனை பேரவை ஒன்றை நிறுவுதல்

    பிரதமரின் அலுவலகத்தினால் 2015 இல் வெளியிடப்பட்ட செயற்திறன் அறிக்கையின் படி ஒரு புதிய ஓய்வூதிய அலுவலகம் மற்றும் ஆலோசனை சபையை அமைக்க நகல் வரைபு கருத்துப்படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    more
    No-action.ta
  • தனியார் துறை ஊழியர்களது மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்

    தனியார் துறை ஊழியர்களது அதிகுறைந்த மாதாந்த சம்பளத்தை ரூபா. 10,000 இற்கு அதிகரித்தல். அத்துடன் மே 2015 தொடக்கம் தனியார் துறை ஊழியர்களது சம்பளத்தை ரூபா 1,500 இனால் அதிகரிப்பதுடன் ஜனவரி 2016 தொடக்கம் ரூபா. 1,000 இனால் மேலும் அதிகரித்தல்.

    'தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டமூலம்' 03 டிசம்பர் 2015 அமைச்சரவை அங்கீகாரம் பெற்றதுடன் பெப்ரவரி 10 2016 அன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. சட்டமூலம் பாராளுமன்றத்தில் 11 மார்ச் 2016 அன்று அங்கீகரிக்கப்பட்டதுடன் 23 மார்ச் 2016 அன்று சபாநாயகாரால் "2௦16 ம் ஆண்டின் 3ம் இழக்க குறைந்தபட்ச ஊதிய சட்டம்" கைச்சாத்திடப்பட்டது.

    more
    Complete-with-compromise.ta
  • தொழில் உறவு பேரவை ஒன்றை நிறுவுதல்

    முன்மொழியப்பட்டுள்ள பேரவை தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரச, தனியார் துறை பிரதிநிதிகளும் உள்ளடக்கி இருக்கும்.

    2016 வரவு செலவுத் திட்டம் தொழிலாளர்களது குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கிய ஒரு தொழில் பேரவை ஸ்தாபிக்க பரிந்துரை செய்தது.

    more
    Poor-progress-stalled.ta
  • தொழில் வாய்ப்பை இழந்த ஊழியர்களுகாக ஒரு காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் சிறிய வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூபா. 500,000 வரையான கடன் தொகையினை வழங்குதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • அனைத்து அரசாங்க தொழில் முயற்சிகளையும் அரச வணிக தொழில் முயற்சி சபையின் கீழ் கொண்டுவரப்படும்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • EPF மற்றும் ETF நிதியத்தை பராமரிக்க பொது உடைமை அறக்கட்டளை ஒன்றை ஸ்தாபித்தல்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேசிய கடன் பணியகத்தினை நிறுவுதல்

    ஒரு சுயாதீன கடன் அலுவலகத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக 2017 வரவு செலவுத் திட்ட உரையின் போது கூறப்பட்டது.

    more
    Poor-progress-slow.ta
  • தற்போது காணப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை புலன் விசாரணை செய்யும் ஆணைக்குளுவிட்கு பதிலாக ஒரு சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுதல்

    அரசியலமைப்பு சபையின் பிரேரணைக்கு அமைவாக 3 சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன் அக்டோபர் 2015 அன்று அவ்ஆணைக்குழுக்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டது.

    more
    Complete.ta
  • தகவல் அறியும் உரிமை சட்டத்தை இயற்றுதல்

    தகவல் அறியும் உரிமைக்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக 3 டிசம்பர் 2015 அன்று பிரதமர் தெரிவித்தார். சட்டமூலம் 24 மார்ச் 2015 அன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதுடன் 24 ஜூன் 2016 அன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 4 2016 அன்று சபாநாயகர் இச்சட்டமூலத்தை அங்கீகரித்து கைச்சாத்திட்டார்.

    more
    Complete.ta
  • தேசிய கணக்காய்வு சட்டத்தை இயற்றுதல்

    கணக்காய்வு சட்டமூலம் பலமுறைகள் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டபோதும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவை திரும்பி பெறப்பட்டன

    more
    No-action.ta
  • தற்போது காணப்படும் 1865 ஆம் ஆண்டின் பொலிஸ் கட்டளைகளுக்குப் பதிலாக புதிய பொலிஸ் சட்டத்தை இயற்றுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பொலிஸ் மற்றும் குற்றவியல் நீதி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்தல்

    அரசியல் யாப்பு சட்டசபையினால் அதன் இடைக்கால அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது

    more
    On-track.ta
  • விகிதாசார தேர்தல் முறையை நீக்கி தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறை இரண்டையும் கொண்ட கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தல்

    அரசியல் யாப்பு சட்டசபையின் கலந்துரையாடல்களுக்கு அப்பால் எவ்வித முன்னேற்றமும் இல்லை

    more
    Poor-progress-slow.ta
  • 20 துறைசார் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களை நிறுவுதல்

    19 டிசம்பர் 2015 அன்று பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக 16 துறைசார் பாராளுமன்ற மேற்பார்வைக்குழுக்கள் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

    more
    Complete.ta
  • ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு சபையினை நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல்

    இலங்கையின் அரசியலமைப்புச் சபையின் உபகுழுக்களுள் ஒன்றாகிய நீதித்துறை சார்ந்த வழிப்படுத்தும் குழு அதன் அறிக்கையில் ஒரு அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபித்தலை பரிந்துரை செய்துள்ளது.

    more
    Poor-progress-slow.ta
  • சிவில் சமூக உறுப்பினர்களை உள்ளடக்கியவாராக அரசியல் யப்ப்பு சபையில் மாற்றங்களை கொண்டு வரல்

    அரசியல் யாப்பு சபை சபாநாயகர், பிரதம மந்திரி, எதிர் கட்சி தலைவர்களை கொண்டிருக்கும். மிகுதி நபர்கள் சிவில் சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்படுவர்.

    19ம் யாப்புச் சீர்திருத்தத்திட்கு அமைவாக அரசியல் யாப்பு சபை அறிமுகப்படுத்தப்பட்டது ( 7 பாராளுமன்ர உறுப்பினர்களும் 3 சிவில் சமூக அங்கத்தவர்களும் உள்ளடங்கலாக)

    more
    Complete-with-compromise.ta
  • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை ஒன்றை அறிமுகப்படுத்தல்

    பாராளுமன்றத்திட்கு சமர்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையின் இறுதி வரைபு மற்றும் திருத்தப்பட்ட பாராளுமன்ற நிலையியட் கட்டளைகள் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கின்றன.

    more
    Poor-progress-slow.ta
  • அனுராதபுர மஹா விகாரையின் பாரம்பரியத்தை பேணும் முகமாக புத்த தர்மத்தை பயிலுவதற்கான கல்வி நிறுவனத்தை நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேரவாத புத்த தர்மத்தின் பரவலை வெளிநாடுகளில் உள்ள தர்மதூத நிலையனகளிநூடு மேற்பார்வை செய்ய ஒரு உத்தியோகபூர்வ நிலையத்தை ஸ்தாபித்தல். அத்துடன் இலங்கை பிக்குகளால் வெள்நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆலயங்களை பதிவு செய்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • இளம் பிக்குகளின் வறிய பெற்றோர்களிட்கு உதவும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • 2018 இல் தேரவாத தர்ம சங்கயணம் நிகழ்வை நடத்தல். அதற்கான வலைகளை 2016 இலே ஆரம்பித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • புத்த தர்மத்தை வளர்க்க சர்வதேச பயிற்ச்சி நிலையமொன்ரை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தம்மம் பாடசாலைகளை ஸ்தாபிக்க தனி நிதியம் ஒன்றை நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • யாழ்ப்பான பல்கலைகழகத்துடன் இணைந்து "அறநெறி ஆனந்தம்" செயற்திட்டத்தை முன்னெடுத்தல்

    இத்திட்டத்தின் பிரதான நோக்கம் வடக்கும் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உயர் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக்கல்வித்தகைமை இல்லாத ஆசிரியர்களை பயிற்ருவித்தலாகும்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சை மீள்-ஸ்தாபித்தல்

    2015 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது

    more
    Complete.ta
  • திரைப்பட அபிவிருத்தி சபை ஒன்றை நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேசிய திரைப்பட கலைக்கழகம் ஒன்றை ஸ்தாபித்தல்

    தேசிய திரைப்பட கலைக்கழகம் கலைஞ்சர்களது படைப்புத்திறனை மேம்படுத்த உதவும்.

    தேசிய திரைப்பட கலைக்கழகம் அமைப்பதற்காக 2017 வரவு செலவுத் திட்டத்தில் ரூபா. 50 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

    more
    On-track.ta
  • சர்வதேச தரத்துடனான விளையாட்டு வளாகம் ஒன்றை ஸ்தாபித்தல்

    2017 வரவு செலவுத் திட்டம் விளையாட்டு மருத்தவ நிறுவனத்தின் கீழ் மனித செயல்திறன் ஆய்வகம் ஒன்றை ஸ்தாபிக்கவும் (ரூபா. 100 மில்லியன்) தேசிய விளையாட்டு கழகம் ஒன்றை ஸ்தாபிக்கவும் (ரூபா. 100 மில்லியன்) பிரேரித்திருந்தது. இவ்விரண்டு பிரேரணைகளும் 2017 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் உள்வாங்கப்பட்டிருண்தது.

    more
    On-track.ta
  • சுயாதீன விளையாட்டு அதிகார சபையொன்றை ஸ்தாபித்தல்

    எந்தவோரும் அரசியல் ஆதிக்கத்திற்கும் உட்படாத வகையில் சுயாதீன விளையாட்டு அதிகார சபை நிறுவப்படும்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பெண்களுக்கான உரிமை சட்டத்தை இயற்றுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபித்தல்

    பெண்களுக்கான தேசிய ஆணைக்குழு பெண்களுக்கான உரிமைகள் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரக் கட்டமைப்பாக இருக்கும்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பாலியல் மற்றும் பால்நிலை சம்பந்தமான வழக்குகளை துரிதப்படுத்த பிரத்தியேக நீதிமன்றமும் மாவட்ட சட்டமா அதிபர் காரியாலங்களும் நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பால் மற்றும் பால்நிலை சார் வன்முறை தடுப்பு ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பால் மற்றும் பால்நிலை சார் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களிட்கு அரச அனுசரணையுடன் உதவி வழங்கல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • உள்ளூராட்சி சபையில் பெண்களுக்கான 25% ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தல்

    இச்சட்டமூலம் 18 நவம்பர் 2015 இல் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றது. உள்ளூராட்சி அதிகாரசபைகள் (திருத்தம்) சட்டமூலம் 12 ஜனவரி 2016 அன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்ப்ட்டதுடன் 9 பெப்ரவரி 2016 அன்று பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டது. 17 பெப்ரவரி 2016 அன்று சபாநாயகர் இச்சட்டமூலத்திட்கு சான்றுரை வழங்கினார்.

    more
    Complete.ta
  • நிலையான அபிவிருத்தி சட்டத்தினை அமுல்படுத்தல்

    இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தேசிய கொள்கைள் மற்றும் மூலோபாயம் ஆகியவற்றை வகுப்பதற்கு ஒரு நிலைபெருதகு அபிவிருத்தி பேரவை ஒன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் இச்சட்டம் வரையப்பட உள்ளது.

    இச்சட்டமூலத்திட்கு அமைச்சரவை 12 ஜூலை 2016 அன்று அங்கீகாரம் வழங்கியது. இலங்கை நிலைபெருதகு அபிவிருத்தி சட்டமூலம் 9 ஜனவரி 2017 அன்று பாராளுமன்றத்திட்கு சமர்பிக்கப்பட்டதுடன் 21 செப்டம்பர் 2017 அன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

    more
    On-track.ta
  • நடுத்தர மற்றும் தொழிலாளர்களுக்கு நியாய விலையில் பெற்றுக்கொடுக்க 500,000 வீட்டுத்தொடர்கலை கட்டுதல்

    23 மார்ச் 2016 அன்று நகர மற்றும் புறநகர்களில் வசிக்கும் நடுத்தர வருமானம் ஈட்டும் நபர்களுக்கான வீட்டுத்தொகுதி அமைக்கும் 5 வருட செயத்திட்டத்திட்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இச்செயற்திட்டம் 2017 வரவு செலவுத்திட்ட உரையில் 100,000 வீட்டுத்தொகுதிகள் ஒரு தொகுயிற்கு ரூபா. 5 மில்லியன் மற்றும் 250,000 வீட்டுத்தொகுதிகள் ஒரு தொகுயிற்கு ரூபா. 1 மில்லியன் என்றவகையிலும் கட்டமைக்க தனியார் துறைகளை அழைக்கும் விதமாக உள்வாங்கப் பட்டிருந்தது.

    more
    Poor-progress-slow.ta
  • தேசிய சுகாதார சேவைகள் அதிகாரசெவையை ஸ்தாபித்தல்

    தேசிய சுகாதார சேவைகள் அதிகார சபை ஒரு நிறைவேற்று இயக்குனரின் கீழ் ச்தாபிக்கப்படுவதுடன் அதன் கீழ் நோய் தடுப்பு, நோய் குணப்படுத்தல் சுகாதார சேவை வழங்குனர்களின் தரத்தை பேணுதல், அரச வைத்தியசாலைகளை நிர்வகித்தல் மற்றும் மருந்துகளை விநியோகித்தல் ஆகிய நிறுவனங்கள் கொண்டு வரப்படும்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு ஒரு சுயாதீன நிவாக சபையை நியமித்தல்

    மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு ஒரு சுயாதீன நிர்வாக சபையை நியமிப்பதுடன் அதி நவீன ஆய்வுகூட உபகரணங்களை வழங்குதல்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேசிய சுகாதார காப்புறுதித் திட்டத்தினை அறிமுகம் செய்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • அவசர நடமாடும் மருத்துவ சேவையை ஸ்தாபித்தல்

    ஒரு புதிய அவசர நடமாடும் மருத்துவ சேவை மேல் மற்றும் தென் மாகாணங்களில் ஸ்தாபிக்கப்படும்.

    28 ஜூன் 2016 அன்று கட்டணமற்ற அவசர முன் நிவாரண சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அவசர ஆம்புலன்ஸ் சேவை 28 ஜூலை 2016ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

    more
    Complete.ta
  • சர்வதேச சந்தைகளை இலக்காக கொண்டு தாதியியளிட்கான ஒரு பீடத்தினை ஸ்தாபித்தல்

    தாதியர்களிட்கான தேசிய மற்றும் சர்வதேச கேள்விக்கு முகம் கொடுக்கும் முகமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தாதியல் பள்ளியை ஆரம்பிக்க 2016 வரவு செலவுத்திட்டம் ரூபா. 2500 மில்லியனை ஒதுக்கியது. அரச தாதியர்அமைப்பின் தலைவர் சமன் ரத்னப்ப்ரியவின் கருத்தின் படி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்தாபிக்கப்படவுள்ள தாதியியல் பீடத்திற்கு 2017 கல்வியாண்டிற்கு 100 மாணவர்கள் உள்வாங்கப்பட உள்ளனர்.

    more
    Complete.ta
  • 1000 டயலிசிஸ் இயந்திரங்களை பொருத்துதல்

    1,000 டயலிசிஸ் இயந்திரங்களை சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பொருத்துதல்.

    2016 வரவு செலவுத்திட்டம் 1,000 டயலிசிஸ் உபகரணங்களை ஸ்தாபிக்க ரூபா. 6,500 மில்லியன் முன்மொழிந்தது. 2016 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் முன்மொழியப்பட்ட அதே தொகையை தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்தின் கீழ் ஒதுக்கியிருந்தது. நிதியமைச்சின் ஆண்டறிக்கை - 2016 இன்படி ரூபா. 364,653,104 சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டதுடன் ஒதுக்கப்பட்டது.

    more
    Poor-progress-slow.ta
  • அங்கவீனர்கள் உரிமை சட்டத்தினை இயற்றுதல்

    உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் மாநாடு என்பவற்றுக்கு அமைவாக மாற்றுத்திரனாளிகளின் உரிமைகள் பற்றிய சர்வதேச மாநாடு ஐக்கிய நாடுகள் சபையினால் 2006 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை 2007 இல் இம்மாநாட்டில் கைச்சாத்திட்டது. அமைச்சர் s.B. திஸ்ஸாநாயகவினால் இம்மாநாட்டிற்கு இசைவு தெரிவிக்க கொண்டு வரப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்காக தயாரிக்கப்பட்ட சட்டப்பத்திரிகை அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டிருப்பதுடன் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை

    more
    Poor-progress-slow.ta
  • சர்வதேச தரத்துடனான ஆயுர்வேத நிலையமொன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • சுதேச மருத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வைத்தியர்களை உருவாக்க பட்டப்பின் படிப்பு நிலையமொன்றை உருவாக்கல்

    அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் சுதேச மருத்துவத்திற்கான பட்டப்பின் படிப்பு நிலையமொன்று ஸ்தாபிக்க = கொண்டுவந்த முன்மொழிவு அமைச்சரவையால் 24 மே 2016 அன்று அங்கீகரிக்கப்பட்டது. 2017 வரவு செலவுத் திட்டம் ரூபா. 250 மில்லியன் பட்டப்பின் ஆயுர்வேத மருத்துவத்தில் நிலையத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தியை பலப்படுத்த ஒதுக்க பிரேரித்தது. இத்தொகை 2017 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலும் பிரதிபலித்தது.

    more
    On-track.ta
  • அழகுசாதனப்பொருள் மற்றும் ஒப்பனை சேவைகளை கட்டுப்பாட்டு சபையொன்றை ஸ்தாபித்தல்

    அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் அழகுசாதனப்பொருள் மற்றும் ஒப்பனை சேவைகளை கட்டுப்படுத்த கொண்டுவந்த முன்மொழிவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இன்னும் சட்டமூலம் சமர்பிக்கப்படவில்லை

    more
    No-action.ta
  • க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலக்கூடிய வாய்ப்பை அனைவருக்கும் வழங்குதல்

    கல்வி அமைச்சின் அறிக்கையின் படி அமைச்சு க.பொ.த. சாதாரப் பரீட்சையில் சித்திபெற தவறிய மாணவர்களிற்கு உயர் தரத்தில் 4 நிபந்தனைகளின் அடிப்படையில் கல்வி கற்க அனுமதித்துள்ளது. இச் செயற்திட்டம் 42 பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

    more
    On-track.ta
  • தொழில் பயிற்சிகளை க.பொ.த உயர் தர பாடத்திட்டத்தினுள் உள்வாங்குவதன் மூலம் 13 வருட கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தல்

    13 வருட கட்டாய கல்விக்கான உத்தேச திட்டம் செப்டம்பர் 2017 இல் ஆரம்பிக்க உள்ளது. இதற்கான பாடசாலைகளை அடையாளப்படுத்தும் வேலைத்திட்டம் முடிந்து உள்ளதுடன் இதற்காக 42 பாடசாளைகளும் 4,419 மாணவர்களும் 12ம் தரத்திற்கான தொழிட்கல்விக்கு உள்ளீர்க்க அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    more
    On-track.ta
  • தேர்தல் பிரச்சார நிதிக் கட்டுப்பாட்டு சட்டத்தினை அறிமுகப்படுத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • புதிய பாடசாலைக் கல்வி சட்டத்தினை அறிமுகப்படுத்தி தனியார் பாடசாலைகளையும் பொதுக் கல்வித் திட்டத்தின் கீழ் கொண்டு வருதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேசிய ஈ-நூலகம் ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பொலிஸ் மற்றும் குற்றவியல் நீதி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுதல்

    இப்பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் பிரதமரால் வெளியிடப்பட்டபோதும் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை

    more
    No-action.ta
  • உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிதி உதவி வழங்கல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதற்கு பல்கலைக்கழக கல்வி சபை ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை

    more
    No-action.ta
  • பொதுக் கொள்கை மற்றும் பொது நிருவாகத்திற்கான ஒரு கல்வி நிலையத்தை நிறுவுதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேசிய ஜோதிட நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • மேலதிக 1 மில்லியன் வலைவாய்ப்புக்களை உருவாக்கல்

    இலங்கை தொழிட்படை கணக்கெடுப்பின் படி செப்டம்பர் 2015 முதல் 2017 வரை அண்ணளவாக 400,0000 தொழில் வாய்ப்புக்கள் பொருளாதாரத்திற்குள் சேர்த்துகொள்ளப்பட்டுள்ளது.

    more
    On-track.ta
  • இளம் பிக்குகள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை கண்டறிய ஒரு குழுவை அமைத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேசிய கணக்காய்வு சட்டத்தை இயற்றுதல்

    தேசிய கணக்காய்வு சட்டம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் இயற்றப்படும்.

    தேசிய கணக்காய்வு சட்டமூலம் பல முறை அமைச்சரவையில் சமர்பிக்கபட்டபோதும் திரும்பி பெறப்பட்டது. இன்னும் அமைச்காரவி அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    more
    No-action.ta
  • தகவல் அறியும் உரிமை சட்டம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் இயற்றப்படும்

    தகவல் அறியும் உரிமைக்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக 3 டிசம்பர் 2015 அன்று பிரதமர் தெரிவித்தார். சட்டமூலம் 24 மார்ச் 2015 அன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதுடன் 24 ஜூன் 2016 அன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 4 2016 அன்று, அரசாங்கம் ஆட்சிக்கு வந்து அண்ணளவாக 12 மாதங்களின் பின்னர் சபாநாயகர் இச்சட்டமூலத்தை அங்கீகரித்து கைச்சாத்திட்டார்.

    more
    Complete-with-compromise.ta
  • "கடல் எமது சகோதரன்" என்னும் கருப்பொருளின் கீழ் மீனவ அபிவிருத்தி திட்டம்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • இலவச புத்தியுர்ப்புக் கல்வி நிதியத்தை ஸ்தாபித்தல்

    இலவச புத்தியுர்ப்புக் கல்வி நிதியம் பிள்ளைகள் இலவசக் கல்வியை பெற்றுக்கொள்வதற்கு மற்றும் கல்வி வசதிகளை அதிகரிக்கவும் பயன்படும்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பொருளாதார இலக்குகளை அடைந்து கொள்வதற்காக தேசிய நிலையான அபிவிருத்தித் திட்டத்தை விருத்தி செய்தல்

    இச்சட்டமூலத்திட்கு அமைச்சரவை 12 ஜூலை 2016 அன்று அங்கீகாரம் வழங்கியது. இலங்கை நிலைபெருதகு அபிவிருத்தி சட்டமூலம் 9 ஜனவரி 2017 அன்று பாராளுமன்றத்திட்கு சமர்பிக்கப்பட்டதுடன் 21 செப்டம்பர் 2017 அன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

    more
    On-track.ta
  • கலாசார பொருட்களின் அறிவுசார் சொத்து உரிமையை பாதுகாக்க சட்டமொன்றை இயற்றுதல்

    பயணம் மற்றும் கலாச்சாரம் சம்பந்தமான புலமைச்சொத்துரிமை செயத்திட்டத்தை அமுல்படுத்த இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சர்வதேச புலமைச்சொத்துரிமை நிறுவனத்துக்கும் (WIPO) இடையில் ஒரு நிறுவன ஒப்பந்தத்தை கைச்சாத்திட அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் S.B நாவின்ன ஆகியோரால் முன்மொழியப்பட்ட இணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது.

    more
    Poor-progress-slow.ta
  • குற்றவாளிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடைசெய்யும் விதமாக சட்ட திருத்தங்களை செய்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேர்தல் முறைமை சம்பந்தமான சட்டத்திருத்தங்களை கொண்டு வரல் - 7ம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 20 சட்ட யப்புச்சீர்த்திருத்தம் மீள்அறிமுகப்படுத்தப்படும்

    அரசியல் யாப்பு சட்டசபையின் கலந்துரையாடல்களுக்கு அப்பால் எவ்வித முன்னேற்றமும் இல்லை

    more
    Poor-progress-stalled.ta
  • உட்கட்சி ஜனநாயம் மற்றும் கட்சியினுல் தீர்மானம் எடுக்கும் பொறிமுறையில் ஜனநாயகத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக சட்டங்களை அறிமுகப்படுத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • விவசாயிகளுக்கு விதைகள் வைத்திருப்பதற்கான உரிமை மற்றும் விதை வழங்குவதற்கான அரசின் கடமைகளை உறுதிப்படுத்தும் விதமாக சட்டங்களை இயற்றல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • சிறிய தேயிலைத்தோட்டங்களின் உரிமையாளர்களுக்கு சலுகை கடன் வசதிகள் வழங்குதல்

    நிதியமைச்சின் ஆண்டறிக்க -2016 இன் படி 219 தேயிலை தொழிட்சாலை உரிமையாளர்களுக்கு மொத்தமாக ரூபா. 6,959 மில்லியன் மூலதனக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது 2015 இல் வழங்கப்பட்ட 69 கடன் வசதிகளுடன் ஒப்பிடும் போது 2016 இல் 217% அதிகரிப்பாகும்

    more
    On-track.ta
  • தொழில்துறை அபிவிருத்தி சட்டத்தை இயற்றுதல்

    கைத்தொழிலாளர்கள் தமது தொழிலை ஆரம்பிக்கும், விஸ்தரிக்கும் மற்றும் கொண்டுசெல்லும் போது எதிர்நோக்கும் தடைகளை நீக்க புதிய வரைசட்டகம் அறிமுகப்படுத்தல்

    more
    No-action.ta
  • அரசுக்கு சொந்தமான நிலங்களில் 10 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்பவர்களுக்கு அந்நிலத்திற்கு உரித்துரிமை வழங்கும் விதமாக சட்ட ஏற்பாடு செய்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • ஊடகங்களுக்காக ஒழுக்கக்கோவை ஒன்றை அறிமுகப்படுத்தல்

    செய்தி ஊடகங்களுக்கான தரம் நிர்ணயிக்கும் சுயாதீன சபையை நிர்மானிப்பதற்கான சட்டத்தை வரைய அமைச்சரவை ஜூலை 11 2017 அன்று அமைச்ரவை ஒரு உப குழுவை நியமித்தது. அமைச்சர் மங்கள சமரவீரவினால் வழிநடத்தப்படும் இக்குழு அமைச்சர்களான சரத் அமுனுகம, ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோரை உள்ளடக்கியதுடன் 2 மாதங்களில் ஒரு நகல் சட்டமூலத்தை அமைச்சுக்கு சமர்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

    more
    No-action.ta
  • வளி, நீர், மண், சத்தம், காட்சி ஆகிய 5 வகையான மாசுபடுதலை இல்லாமலாக்க தேசிய கொள்கையை அமுல்படுத்தல்

    அரசாங்கம் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த சுற்றாடலைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. அனைத்து சம்பந்தப்பட்ட தரப்புகளையும் உள்வாங்கி இருக்கும் சுற்றாடலைப் பாதுகாக்கும் "புனருத்தாபனம்" வேலைத்திட்டம் (2016-2018), 3 வருட காலத்தினுள் பிரதான சுற்றாடல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முனைகிறது. இவ்வேளைத்திட்டத்திட்கு 3 வருடங்களுக்கு ரூபா. 22547 மில்லியன் செலவாகும். அத்துடன் 2016 வரவு செலவுத் திட்டம் ரூபா. 2,000 மில்லியன் முன்மொழிந்திருந்ததுடன் 2016 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளும் அத்தொகையை ஒதுக்கி இருந்தது. நிதியமைச்சின் ஆண்டறிக்கை - 2016 இன்படி ஒதுக்கப்பட்ட நிதியின் 90% அமைச்சினால் செலவளிக்கப்பட்டிருந்தது.

    more
    On-track.ta
  • "ஜன சபா" வினை நிறுவுவதன் மூலம் மக்கள் மத்தியில் சமூக அபிவிருத்தி கதையாடல்களை ஏற்படுத்தல்

    நாட்டின் அனைத்து பொருளாதார, கட்டுமான, நீர்பாசன மற்றும் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜன சபா செயலகத்தினூடாக அமுல்படுத்தப்படும்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல்

    தேசிய நல்லிணக்க ஆணைக்குழு, தேசிய நல்லிணக்க சாசனத்திற்கு அமைவாக அனைத்து இலங்கையர்களதும் நியாயத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்த பரந்த அதிகாரங்களுடன் மாவட்டரீதியாக செயற்படும்.

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அனைத்துக் அரசியட் கட்சிகளையும் கொண்ட குழு ஒன்றை அமைத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தேசிய பொருளாதார ஆலோசனை சபையை ஸ்தாபித்தல்

    தேசிய பொருளாதார ஆலோசனை சபை பொருளாதார அபிவிருத்திக்கு வழிகாட்டியாக இருப்பதுடன் தலைமை தாங்கும்.

    தேசிய பொருளாதார ஆலோசனை சபையை ஸ்தாபிக்க ஆகஸ்ட் 9 2017 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.. இச்சபை செப்டம்பர் 12 2017 அன்று ஜனாதிபதி செயலகத்தில் முதன்முறையாக ஒன்று கூடியது.

    more
    Complete.ta
  • அரசியல் யாப்பு சபையை ஸ்தாபிப்பதுடன் ஆட்சிக்கு வந்து 1 மாத காலத்தினுள் செயற்படுத்தல்

    புதிய பாராளுமன்ற ஒன்றுகூடலை தொடர்ந்து அரசியல் யாப்பு சபை செப்டம்பர் 10 2015 அன்று முதன் முறையாக ஒன்றுகூடியது.

    more
    Complete.ta
  • அரச நிறுவனகளுக்கு நியமனம் வழங்க அனைத்து அரசியட் கட்சிகளைய்ம் பிரதிநிதித்துவம் செய்யும் பாரளுமன்றக்குழுவை அமைத்தலும் அனைத்து அரச ஊழியர்களும் இலங்கை பிரசையாக இருத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • ஆட்சிக்கு வந்து 6 மாதத்தினுள் துறைசார்ந்தவர்கள் மற்றும் மதத்தலைவர்களது பிரதிநிதித்துவத்துடன் தேசிய ஒருமைப்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கும். ஆட்சிக்கு வந்து 1 வருடத்தினுள் அவை அமுல்படுத்தப்படும்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தோட்டத்துறை மக்களுக்காக நுவரஎளியவில் ஒரு உயர் கல்வி நிறுவனத்தை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • திறன் விருத்தி அமைச்சின்கீழ் வேலை-வங்கி ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • காணி-வங்கி ஒன்றை ஸ்தாபித்தல்

    2016 வரவு செலவுத் திட்டம் ஒரு காணி வங்கியை ஸ்தாபிக்க ரூபா.500 மில்லியன் பரிந்துரை செய்ததுடன் 2016 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளிலும் தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் கீழ் இத்தொகை ஒதுக்கப்பட்டது. நிதியமைச்சின் ஆண்டறிக்கை - 2016 இன்படி மதிப்பிடப்பட்ட தொகையில் ரூபா. 195 மில்லியன் காணி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டதுடன் அதில் 56% ஆன நிதியை அமைச்சு செலவளித்திருந்தது.

    more
    On-track.ta
  • விவசாயிகளது கடன் சுமையைக் குறைக்க "விவசாய வங்கி" ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • செயற்திறன் மிக்க விதத்தில் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கான முறையை இனங்கான சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிதியம் ஒன்றை அமைத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • அறிவு மற்றும் கண்டுபிடிப்புக்களை விருத்தி செய்ய பல்கலைக்கழகத்துடன் இணைந்தவாறு தொழிநுட்ப ஆராய்ச்சி ஆய்வுகூடம் ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • அரச கூட்டுத்தாபனங்களிட்கிடையில் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த "ஜாதிக சபா" வை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • அனைத்து பிரதேச சபைக்கும் ஒரு "நாட் பராமரிப்பு" நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • முச்சக்கர வண்டி, டக்சி மற்றும் பாடசாலை வேன்களை ஒழுங்குபடுத்த நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • விரிவுரையாளர்களுக்கான ஆராய்ச்சி நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • "சிறைக்கைதிகளும் மனிதர்களே" என்னும் தொனிப்பொருளில் சிறைக்கைதிகளது நிலைகளை உயர்தல் மற்றும் சிறைகளது வசதிகளை அதிகரித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பாரம்பரிய மீனவர்கள் மற்றும் மீன்பிடி துறைக்குள் நுழைபவர்களுக்கான" " மீன்பிடி கல்விக் கலாசாலை" ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவரும் இடங்களில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வெளிநாட்டு மொழிகளில் தேர்ச்சியை வழங்க பாடவகுப்பொன்றை அறிமுகப்படுத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் சிறந்தமுறையில் திறமைகளை வெளிப்படுத்திய 500 பேரிற்கு சர்வதேச திறன் விருத்தி முகாம்களில் பங்குபெற வாய்ப்பை வழங்கல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பின்தங்கிய கிராமப்புறங்களில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், ICT, அழகியல் கல்வி மற்றும் பௌதீகக் கல்வி போன்ற பாடங்களை கட்பிட்ட்க 5௦,௦௦௦ பயிற்ரப்பட்ட ஆசிரியர்களை நியமித்தல்

    2016 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் கல்வியமைச்சின் கீழ் ரூபா. 2,000 மில்லியன் இதற்கான ஒதுக்கப்பட்டது. நிதியமைச்சின் ஆண்டறிக்கை - 2016 இன்படி இதில் ரூபா. 27 மில்லியனை அமைச்சு செலவு செய்து இருந்தது.

    more
    Poor-progress-slow.ta
  • மஹிந்தோதய பாடசாலைத் திட்டத்தை அனைத்து பிரதேச பிரதேச செயலகத்திலும் அமுல்படுத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணிதப்படத்தில் தோற்றத்தவறிய மாணவர்களிற்கு இரண்டு வருடங்கலினுள் சித்தியடைதல் எனும் உடன்படிக்கையின் கீழ் க.பொ.த உயர் தரத்தில் கற்க அனுமதித்தல்

    கல்வி அமைச்சின் அறிக்கையின் படி அமைச்சு க.பொ.த. சாதாரப் பரீட்சையில் சித்திபெற தவறிய மாணவர்களிற்கு உயர் தரத்தில் 4 நிபந்தனைகளின் அடிப்படையில் கல்வி கற்க அனுமதித்துள்ளது. இச் செயற்திட்டம் 42 பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

    more
    On-track.ta
  • 2020ம் ஆண்டு உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக சீனி தொழிட்சாலைகளை அபிவிருத்தி செய்தல்

    2016இல் வெளியிடப்பட்ட "சீனி தொழிற்சாலைகளுக்கான அபிவிருத்தித் திட்டம்" 7 முக்கிய திட்டங்களை கொண்டிருந்தது: நிறுவனத் திட்டம், முதலீட்டுத் திட்டம், உற்பத்தி மற்றும் காணித் திட்டம், நீர் வழங்கல் மற்றும் கட்டுமான அபிவிருத்தித் திட்டம் மற்றும் மனிதவள அபிவிருத்தித் திட்டம். இத்திட்டத்தின் மூலம் 2020 இல் 50% தன்னிறைவை உள்நாட்டு உற்பத்தியின் மூலம் அடைய எதிர்பார்க்கப்படுகிறது.

    more
    Poor-progress-slow.ta
  • வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்களுக்கு ஆயுள் காப்புறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தல்

    2017 வரவு செலவுத்திட்டம் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஒரு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை முன்மொழிந்தது. குவைத் நிதியத்தின் ஊடாக அரசு மற்றும் தொழில் புரிபவர்களின் பங்களிப்பையும் இணைத்து இது வழங்கப்படும். இது பற்றிய மேலதிக தகவல் எங்கும் இல்லை.

    more
    Poor-progress-slow.ta
  • 12 சுதந்திர வர்த்தக வலயங்களை நாடுபூராவகும் அறிமுகப்படுத்தல்

    தனியார் துறையுடன் இணைந்து அதிவேக நெடுஞ்சாலைக்கு அண்மிய பகுதிகளில் சுதந்திர வர்த்தக வலயங்கள் நிர்மாணிப்பதை ஊக்குவிக்க 2017 வரவு செலவுத் திட்டம் ரூபா. 1,000 மில்லியன் முன்மொழிந்தது. இதற்கான அரசாங்கம் காணி, மின்சாரம் மற்றும் நீர்வசதி ஆகியவற்றை வழங்கும். 2017 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளும் இத்தொகையை தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் கீழ் ஒதுக்கியிருந்தது.

    more
    Poor-progress-slow.ta
  • மஹபொல உதவித்தொகையை ரூபா. 6000 ஆக அதிகரித்தல்

    ஆகஸ்ட் 2015இல் பொது தேர்தல் நடைபெருவதட்கு முன்னர் அரசாங்க மகாபொல உதவித்தொகையை ரூபா. 5,000 ஆக அதிகரித்து இருந்தது.

    more
    No-action.ta
  • பட்டம் பெற்ற பின் அரச அல்லது தனியார் துறையில் ரூபா. 5000 கொடுப்பனவுடன் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்குதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தோட்டத் தொழிலாளர்களிட்கு குறைந்த பட்ச வேதனமாக ரூபா. 1,000 வழங்குதல்

    அக்டோபர் 18, 2016 அன்று தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் மற்றும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தோட்ட ஊழியர்களது நாளாந்த ஊதியத்தை அதிகரிக்க சம்மதித்தது. இதனடிப்படையில் முன்னர் இருந்த ரூபா. 620 இல் இருந்து ரூபா. 730 இற்கு நாளந்த சம்பளம் அதிகரிக்கப்பட்டது.

    more
    Complete-with-compromise.ta
  • முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ரூபா 100,000 பெறுமதியான கடனட்டைகளை வழங்குதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • வயோதிபர்களுக்கு மருந்திட்கு ரூபா. 3,000 மற்றும் அறுவை சிகிச்சைக்கு ரூபா. 500,000 என்ற விதத்திலான மருத்துவக் காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பல்கலைகழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு ரூபா. 10,000 பெறுமதியான உதவித்தொகை வழங்கல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • திறந்த பல்கலைகழகத்திற்கு தேர்வு செய்யப்படும் 35 வயதுக்கு குறைந்த வேலையில்லா இலைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பல்கலைகழக மாணவர்களுக்கு மடிகணினி வாங்க விட்டியில்லா கடன் வழங்கல்

    பல்கலைகழகங்களில் இலவச wifi வசதி வழங்கவும் பல்கலைக்கழக மாணவர்களிற்கு மடிக்கணினி வழங்கவும் 2016 வரவு செலவுத்திட்டம் ரூபா. 300 மில்லியன் முன்மொழிந்திருந்தது.

    more
    On-track.ta
  • பாலர்பாடசாலைகளின் கட்டுமானப்பணிகளுக்கு ரூபா. 50,000 பெறுமதியான வட்டியில்லா கடன் வழங்கல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா. 5,000 பெர்மதியான கொடுப்பனவு

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • 18-25 வயது வரையான இளைஞர்களது கல்வித்தேவைக்காக ரூபா. 5,000 வீதம் ஒதுக்கப்படும்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • பெற்றோர்களை இழந்த குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களைக் கொண்ட குழந்தைகளுக்கு மாதாந்தம் ரூபா. 5,000 வீதம் கொடுப்பனவு வழங்கல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • கர்ப்பிணித் தாய்மார்களிட்கு த்ரீபோஷ மற்றும் ப்ரோடீன் உணவு வழங்கல்

    நிதியமைச்சின் ஆண்டறிக்க -2016 இன் படி ரூபா. 500 மில்லியன் சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கப்படிருந்ததுடன், அதில் 29% நிதியை அமைச்சு செலவளித்திருந்தது.

    more
    On-track.ta
  • கர்ப்பிணித் தாய்மார்களிட்கு சத்துணவு கொள்வனவு செய்ய ரூபா. 20,000 வீதம் வழங்கல்

    நிதியமைச்சின் ஆண்டறிக்க -2016 இன் படி ரூபா. 500 மில்லியன் சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கப்படிருந்ததுடன், அதில் 39% நிதியை அமைச்சு செலவளித்திருந்தது

    more
    On-track.ta
  • சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% உயர்ந்த பட்ச வட்டிவீதத்திற்கான வைப்புத்தொகையை 2.5 மில்லியன் ஆக அதிகரித்தல்

    சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% உயர்ந்த பட்ச வட்டிவீதத்திற்கான வைப்புத்தொகையை 1 மில்லியன் இல் இருந்து 1.5 மில்லியன் ஆக மார்ச் 2016 முதல் அமுலிற்கு வருமாறு அதிகரிக்கப்பட்டது.

    more
    Complete-with-compromise.ta
  • பிரதேச சபைக்குட்பட்ட பாவனையாலர்களிட்கு மின்சாரப்பட்டியலில் 50% கழிவும் நீர் பட்டியலில் 25% கழிவு வழங்கல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • முதல் 6 மாதத்தில் துணிகள், சுடுநீர் குடுவை, சோப் மற்றும் அத்தியாவசிய பொருட்களை குழந்தைக்கு வழங்குதல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • சுய தொழிலில் ஈடுபட விருப்பமுள்ள 50,௦௦௦௦ பெண்களிற்கு பயிற்ச்சி வழங்கல். ரூபா. 50,000 தொடக்கம் ரூபா. 200,000 வரை குறைந்த வட்டி வீதத்த்லான கடன் வழங்கல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • அரச வீட்டுத்தொகுதியில் 10 வருடங்களுக்கு மேலாக குடியிருப்போருக்கு வீட்டுரிமையை வழங்கல்

    தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA) 28.01.2016 அன்று விஹாரமஹாதேவி திறந்தகூடத்தில் கொழும்பில் 10 வருடங்களுக்கு மேலாக NHDA மற்றும் அரச சொந்தமான வீடுகளில் வசிக்கும் 2,500 பேரிற்கு காணி இரித்துரிமையை வழங்கியது.

    more
    On-track.ta
  • தரம் 1 முதல் 5 வரையான அனைத்து பாடசாலை குழந்தைகளுக்கும் தேசிய சேமிப்பு வங்கியில் ரூபா. 1,200 பெறுமதியான சேமிப்பு வைப்பிளிடல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • தெரிவு செய்யப்பட்டவர்களிட்கு ரூபா. 4 மில்லியன் வீட்டுக்கடன் வழங்கல்

    தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA) தற்போது ரூபா. 100,000 மற்றும் ரூபா. 250,000 பெறுமதியான இரண்டு வகையான வீட்டுக்கடன் திட்டங்களை வழங்குகின்றது:

    more
    Poor-progress-slow.ta
  • சிரேஷ்ட பிரஜைகளுக்கு பொதுபோக்குவரத்து சேவையில் பிரயாணம் செய்ய இலவச சீட்டு வழங்கல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்து கிழக்கையும் வடக்கையும் இணைத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • மத்தலை விமான நிலையத்திற்கு அருகாமையில் சுற்றுலாவை மேம்படுத்த 'உல்லாச மையம்' ஒன்றை அமைத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • 2 km இற்குள் பாலர்பாடசாலை மற்றும் நாள் பராமரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • கதிர்காமக் வரை ரயில் பாதையை விஸ்தரித்தல்.

    மாத்தறை - கதிர்காமம் இரயில் பாதை நீடிப்பு முடியும் நிலையை எட்டியுள்ளது.

    more
    On-track.ta
  • கோட்டை புகையிரத நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம் என்பவற்றை இணைக்க மனிங் மரக்கறி சந்தை உள்ள இடத்த உபயோகித்தல்.

    மன்னிங் சந்தையை இடம்மாற்ற சம்பிக்க ரணவகை மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரால் கொண்டுவரப்பட்ட இணைந்த யோசனை 6.12.2016 அன்று அமைச்சரவை அங்கீகாரம் பெற்றது. நிதியமைச்சின் ஆண்டறிக்கை - 2016 இன்படி மெகாபொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதற்காக ரூபா. 303 மில்லியன் செலவழித்துள்ளது.

    more
    On-track.ta
  • ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு விளையாட்டு மைதானம் ஏற்படுத்திக் கொடுத்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • கைத்தறி புடைவைகளை விற்க கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இரண்டு நிலையங்களை ஸ்தாபித்தல்

    கைத்தறி புடைவைத் துறையினரின் தொழில் முனைவு பயிற்ச்சிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க 2017 வரவு செலவுத்திட்டம் ரூபா. 500 மில்லியன் முன்மொழிந்ததுடன் அதே தொகை 2017 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் உள்வாங்கப்பட்டிருத்தது

    more
    On-track.ta
  • மகாராகமையில் ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க வியாபாரிகளை இலக்காகக்கொண்டு மொத்த வியாபர நிலையமொன்ற ஸ்தாபித்தல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • சிறிய மற்றும் நடுத்தர ஆடை தொழில்சாலைகளை கருத்தில் கொண்டு 3 மொத்த விற்பனை நிலையங்களை மகரகம, கம்பஹா மற்றும் காத்தான்குடி நகரங்களில் நிறுவல்

    2017 வரவு செலவுத் திட்டம் தனியார் மற்றும் அரச பங்குடைமையின் கீழ் ஒன்றை ஸ்தாபிக்க ரூபா. 100 மில்லியன் ஒதுக்கியிருந்தது. இந்நிலையம் கைவினை, புடைவை மற்றும் பாதணி உற்பத்தி செய்யும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு இடவசதிகளை வழங்கும்.

    more
    Poor-progress-slow.ta
  • கண்டி, காலி, யாழ்ப்பாணம், கட்டுநாயக மற்றும் திருகோணமலை நகரங்களில் தொழிநுட்பக் கிராமங்களை நிறுவல்

    எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை.

    more
    No-action.ta
  • 2020 இல் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கான வேலைத்திட்டங்களை செய்தல்

    Number of tourists arrived in 2015: 1,798,380 Number of tourists arrived in 2016: 2,050,832

    more
    Poor-progress-slow.ta
  • 1.5 மில்லியன் புதிய தொழில்களை உருவாக்கல்

    இலங்கை தொழிட்படை கணக்கெடுப்பின் படி செப்டம்பர் 2015 முதல் 2017 வரை அண்ணளவாக 400,0000 தொழில் வாய்ப்புக்கள் பொருளாதாரத்திற்குள் சேர்த்துகொள்ளப்பட்டுள்ளது

    more
    On-track.ta
  • மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் ஈடுபட்டவர்களிட்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் அந்நிதியை மீளப்பெறுதல்

    ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மத்திய வங்கி பிணை முறி மோசடியை விசாரிக்க மூவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜனவரி 27, 2017 அன்று நியமித்தார்.

    more
    On-track.ta

Subscribe for Manthri.lk

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.